Thursday, January 2

நெய்வேலி என்.எல்.சி-யில் 803 பயிற்சி வேலைகள்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்.எல்.சி) திறமையான இளைஞர்களுக்கான 803 பயிற்சி வேலைகள் காத்திருக்கின்றன.

பணிகள்:
மெடிக்கல் லேப் டெக்னீசியன், ஃபிட்டர், டர்னர், மெக்கானிக், எலக்ட்ரீசியன், வெல்டர், பிளம்பர் போன்ற பணிகளுக்கு பயிற்சி வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:
விண்ணப்பிக்க 14 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு:

மெடிக்கல் லேப் டெக்னீசியன் – 15 மாதங்கள்

மற்ற பணிகள் – 12 மாதங்கள்


உதவித்தொகை:

மெடிக்கல் லேப் டெக்னீசியனுக்கு ரூ.8,766

பிற பணிகளுக்கு ரூ.10,019


கல்வித் தகுதி:

மெடிக்கல் லேப் டெக்னீசியன் பணிக்கு 12ஆம் வகுப்பில் அறிவியல் எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

பிற பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ITI-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க தகுதி:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை www.nlcindia.in இணையதளத்தில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
வட்டம் – 20,
என்.எல்.சி. இந்தியா நிறுவனம்,
நெய்வேலி – 607 803.

கடைசி தேதி: நவம்பர் 6, 2024

இதையும் படிக்க  பெண்களுக்கான உதவித்தொகையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் கவுன்சில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *