“சந்திரமாரி சர்வதேச பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு”

IMG 20241015 WA0009 - "சந்திரமாரி சர்வதேச பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு"<br><br>

கோவை, காளப்பட்டி, விளாங்குறிச்சி சாலையில் உள்ள சந்திரமாரி சர்வதேச பள்ளியின் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய கட்டிடத் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. புதிய கட்டிடத்தை பள்ளியின் நிறுவனர் ஸ்ரீமதி மாரியம்மாள் தலைமையில் திறந்து வைத்தார். விழாவில் பள்ளித் தலைவர் முரளிகுமார் தலைமை வகித்தார், மற்றும் தாளாளர் சுமதி முரளிகுமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை நிறுவனர் டாக்டர் சுரேஷ்பாபு, அறங்காவலர் டாக்டர் கலைவாணி, மற்றும் பள்ளி முதல்வர் விஷால் பண்டாரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இயக்குநர்கள் டாக்டர் விஜய் சந்துரு மற்றும் டாக்டர் கௌதம் சந்துரு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்ட பேஸ்2 கட்டிடத்தில் ஒவ்வொரு வகுப்பறையிலும் டச் ஸ்கிரீன் கம்ப்யூட்டர் போர்டு பொருத்தப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்த கட்டிடத்தில் 33 வகுப்பறைகள் உள்ளன, மேலும் இயற்பியல், வேதியல், உயிரியல் ஆய்வுக்கூடங்கள், டான்ஸ் ஸ்டுடியோ, மற்றும் ஆடியோ ரெக்கார்டிங் தியேட்டர் போன்ற வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க  தமிழக சட்டக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி: ஐகோர்ட் கிளை அதிருப்தி…
img 20241015 wa00088831897941287726722 - "சந்திரமாரி சர்வதேச பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு"<br><br>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *