கோவையில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள், கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நீட் பயிற்சி மையம் இணைந்து வழங்கப்படுகின்றன. நிகழ்வின் தொடக்க விழா சித்தாபுதூர் பள்ளியில் நடைபெற்றது, இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நன்கு படிக்க வேண்டும் என்று அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆணையாளர், இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், நடைமுறை வகுப்புகளை பாதிக்காத வண்ணம் நடத்தப்படும் என்றும், மற்ற பள்ளிகளிலும் இந்த வாய்ப்பை விரும்பும் மாணவர்களை இப்பள்ளிக்கு அழைத்து வந்து, வகுப்புகளை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும் என்றும் கூறினார்.
கோவை மாநகராட்சியில் அவிநாசி மற்றும் காளீஸ்வரன் மேம்பாலங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்ட நிலையில், அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இனி மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.