கோயம்புத்தூர் விநியோகஸ்தர்கள் சங்கம் 1971ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே பொன்விழா கண்ட முதன்மை சங்கம் என்ற பெருமையை மற்றும் 53 ஆண்டு பொன்விழா கண்டு கோயம்புத்தூர் திரைப்படம் விநியோகஸ்தர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
கோவையில் உள்ள அனைத்து தியேட்டர்களில் இந்த சங்கம் தான் தமிழ் மற்றும் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிப்பாளர்களிடம் இருந்து படத்தை வாங்கி கோவை மாவட்டம் முழுவதும் இந்த சங்கத்திலிருந்து தான் படத்தை ரிலீஸ் செய்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2024_2026ஆம் ஆண்டிற்கான பொறுப்பாளர் பதவியை செயற்க்குளு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தலைவர் துணைத்தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 7பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைப்பெற்றது.
இந்த விழா சங்கத் தலைவர் சி. வி தம்பித்துரை டெக்கான் சினி ஆர்ட்ஸ் அவர்களுக்கு மற்றும் துணைத் தலைவர் ஸ்ரீ மீனாட்சி பிலிம்ஸ் வி. பி. எஸ் ஈஸ்வரன் ,பொருளாளர் சூரியா பிலிம்ஸ் எஸ். என்.குமார் ,பொருளாளர் சினி மூவிஸ் பி. கோவிந்தன் அவர்களுக்கும் சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்த விழாவில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் மேலாளர் காசிமஹா ஸ்ரீ மூகாம்பிகா பழனிச்சாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.