“வாரிசு, ஊழல் அரசியலை தாங்க வலுவான இதயம் வேண்டும்: வானதி சீனிவாசன்”

உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்..

img 20240929 wa00225483163018108980852 | "வாரிசு, ஊழல் அரசியலை தாங்க வலுவான இதயம் வேண்டும்: வானதி சீனிவாசன்"
மாறி கொண்டு வரும் வாழ்க்கை பழக்கவழக்கங்கள் காரணமாக இதய நோய் ஏற்பட்டு மக்கள் உயிரிழக்கிறார்கள்.இதயத்தை பாதுகாக்கவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக நிறைய பழக்க வழக்கங்களை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.அதை கடைபிடிக்க வேண்டும் என்று சிறிய வயதில் இருந்தே குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டி இருக்கிறது.

தமிழ்நாடு அரசியலில் இன்று நடக்கும் வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும் என்பதால் இதயத்துக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து இருக்கின்றேன். துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளது தொடர்பான கேள்விக்கு இதயத்தை பலப்படுத்தி விட்டு வருகிறேன் என கூறி சென்றார்.

இதையும் படிக்க  திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிட்டுக்குருவி பாதுகாப்புக்காக கூடு வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Mon Sep 30 , 2024
கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை சத்யா நகரில், சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஜி ஆர் டி கலைக்கல்லூரி இணைந்து சிட்டுக்குருவிகளுக்கான கூடு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கான சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள் குறித்த பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறைவதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பாண்டியராஜன், குறைந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு செயற்கை கூடுகள் அமைப்பதன் […]
IMG 20240930 WA0002 | சிட்டுக்குருவி பாதுகாப்புக்காக கூடு வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி