முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது…

images 93 - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது...

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டம் (PMLA) தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையால் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, 2024 மார்ச் மாதம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 12ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, செப்டம்பர் 26, 2024 அன்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனை வரவேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூக வலைதளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு பிணை கிடைத்துள்ளது. அரசியல் எதிரிகளை ஒடுக்கும் கருவியாக அமலாக்கத்துறையை மாற்றிய சூழலில், உச்சநீதிமன்றம் தான் நியாயம் பறைசாற்றும் தளம். அவசர நிலை காலத்திலும் இவ்வளவு நாட்கள் சிறைவாசம் நிகழவில்லை. 15 மாதங்களாக சட்டத்துக்கு புறம்பான அரசியல் சதி நடந்து கொண்டிருக்கிறது. சிறையில் இருந்து மீண்டு வரும் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க முடியாது.”

இதையும் படிக்க  NC Green Party becomes latest official party

முதல்வர் மு.க. ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தை பாராட்டியும், அவரின் விடாமுயற்சியை புகழ்ந்து வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *