கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள ஜீவன்ஸ் பள்ளியில் 2024 கல்வியாண்டிற்கான சிறந்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உடன்,ஜீவன்ஸ் கல்வி அறக்கட்டளை ஜீவன்ஸ் பள்ளி மற்றும் குழுமங்கள் சேர்மன் என் அப்துல் அஜீஸ் ,தமிழ்நாடு சிறுபான்மை உறுப்பினர், தலைவர் பல்சமய நல்லுறவு இயக்கம் ஷாஜி ஜே முகம்மது ரபீக்,காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவல உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர் பல்சமய நல்லுறவு இயக்கம் எம் எம் ராமசாமி கழக நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.