2-வது நாளாக அதிமுகவினர் வெளிநடப்பு!

2-வது நாளாக அதிமுகவினர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்கின்றனர்.இன்று நடக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத்திலும் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்ததுடன், இன்றும் வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். எடப்பாடி கே. பழனிசாமி பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ”சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, முதலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க வேண்டும். மேலும், எம்எல்ஏ  ஒருவர் இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆகையால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ குழு தான் விசாரிக்க வேண்டும். சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்னையை பேசுவதற்காக தான். நேற்று நான் ஹோமிசோபில் மருந்து பற்றாக்குறையாக இருக்கிறது எனக் கூறினேன். ஆனால், திமுக அமைச்சர் ஓமிபிரசோல் மருந்து பற்றி பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க  தேசியக்கொடி பேரணி நடத்த பாஜாவிற்கு அனுமதி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளச்சாராய மரணம் 54 ஆக உயர்வு....

Sat Jun 22 , 2024
கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு  கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதுவை கள்ளச்சாராயம் குடித்து இறந்த 54 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  Post Views: 136 இதையும் படிக்க  […]
1000241798 | கள்ளச்சாராய மரணம் 54 ஆக உயர்வு....