Friday, December 27

அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன்: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

  • டெல்லி முதலவா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன் வரவேற்ப்பு தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் மக்களவைத் தோ்தலை அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாத ஆளும் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற, தன்னாட்சி அமைப்புகளான வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்றவற்றின் வழியாக எதிா் கட்சித் தலைவா்களை மிரட்டி பணிய வைப்பது, சிறையில் அடைத்து சிறுமைப்படுத்துவது போன்ற ஜனநாயக விரோத, அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்த நிலையில் அரவிந்த் கேஜரிவாலை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி, தோ்தல் பரப்புரை செய்ய அனுமதித்திருப்பதை வரவேற்பதாக இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.
இதையும் படிக்க  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *