மே தினத்தையொட்டி திருச்சியில் 600 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மூன்றரை மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை

img 20240503 wa00444768829663918776650 - மே தினத்தையொட்டி திருச்சியில் 600 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மூன்றரை மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை

வியர்வை உழைப்பை மூலதனமாக கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கும், தங்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் நலத்திற்காகவும் அரும்பாடு பட்டு உழைக்கும் தொழிலாளர்கள் வர்க்கத்தை கௌரவிக்கும் விதமாகவும், நாட்டில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்கவும்,   

img 20240503 wa00468801724743700491538 - மே தினத்தையொட்டி திருச்சியில் 600 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மூன்றரை மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை

மேலும் அன்பு கொண்டு அரவணைத்து பாதுகாக்கும் பெற்றோர்களை போற்ற வேண்டும் பெற்றோர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக இன்றைய தினம் திருச்சியில் சிலம்ப வீரர், வீராங்கனைகள் 600 க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினர்.

img 20240503 wa0043456496109422643253 - மே தினத்தையொட்டி திருச்சியில் 600 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மூன்றரை மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை

உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சார்பில் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் காலை 6 மணி முதல் தொடங்கி 9:30 மணி வரையிலும் 3 மணி நேரம் 30 நிமிடம் இடைவிடாது, பல்வேறு சிலம்பக் கூடத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வரும் 620 சிலம்ப மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனையினை நிகழ்த்தினர். சாதனை புத்தக பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை நிகழ்வானது கிட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க  தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 15 திட்டங்களுக்கு ஒப்புதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

CBSE தேர்வு முடிவுகள்

Sat May 4 , 2024
* 2024 ஆம் ஆண்டிற்கான CBSE 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று CBSE அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbse.gov மற்றும் cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Post Views: 121 இதையும் படிக்க  சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் கேரளா மக்கள்....
Screenshot 20240504 084736 inshorts - CBSE தேர்வு முடிவுகள்

You May Like