கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தின் நீர்மட்டம் அதிகரித்ததினால், உபரி நீரை வெளியேற்றுவதற்காக குளத்தில் உள்ள மதகுகள் திறக்கப்பட்டன. இந்த நடவடிக்கை, அதிக மழையால் ஏற்பட்ட நீர்மட்ட உயர்வின் விளைவாக குளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் இதனை நேரில் சென்று பார்வையிட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். பெரிய குளத்திற்கு நீரை செலுத்தி வெள்ள அபாயத்தை தடுப்பதற்கான இந்த நடவடிக்கையினால் சுற்றுப்புற மக்கள் மற்றும் நகரத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான முழுமையான கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும், நகர மக்களின் பாதுகாப்பு முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Post
"புதுச்சேரி கல்லூரியில் மேற்கூரை இடிந்து மாணவி காயம், மாணவர்கள் சாலை மறியல்"
Tue Oct 15 , 2024
You May Like
-
6 months ago
103 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை
-
7 months ago
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் 3 பேர் கைது