Wednesday, September 10

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா…

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிள் முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா 2024 25 ஆம் கல்வி ஆண்டிற்கான 27 ஆவது துவக்க விழா இன்று நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு மையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் NIA கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீ ராமசாமி விழாவிற்கு வருகை புரிந்து அனைவரையும் வரவேற்றார்.

NIA கல்வி நிறுவனங்களில் தலைவர் டாக்டர் மகாலிங்கம் அவர்கள் தலைமை உரையாற்றி அவர் பேசும் போது, வேலை வாய்ப்புகள் வெற்றி பெறுவது அவசியம் என்பதால் அடிப்படை கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் மாணவர்கள் தங்கள் பட்டப் படிப்பை முடிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருக்காமல் விரிவான நடைமுறை அறிவை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதனால் அவர்களின் திறமைகளை செம்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வேலை வாய்ப்புகளை பெருதும் உயர்த்தும் என்றும் கூறினார்

மேலும் மாணவர்கள் தங்கள் இலக்குகளை ஒருபோதும் கைவிடாமல் இருக்கவும் அறிவுறுத்தி அசைக்க முடியாத உறுதியுடனும் நெகிழ்ச்சியுடனும் தங்கள் கனவுகளை விடாமுயற்சியுடன் தொடரும் மாறும் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.

இதையும் படிக்க  5,000 ஊழியர்கள் பணி நீக்கம்....

இதனைத் தொடர்ந்து கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *