- வெள்ளிக்கிழமை ,சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைகத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தாா்.
- துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினா் தரப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் சம்பவ இடத்தில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
- முன்னதாக, காங்கோ் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி 29 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பின்னா், நாராயண்பூா்-காங்கோ் மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இதுவரை 103 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
103 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை
Follow Us
Recent Posts
-
ஆனைமலையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
-
கோவையில் ஓணம் விருந்தில் 22 வகை உணவு, தங்க நாணய பரிசு!
-
27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகளை கோவையில் துவக்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்
-
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்: பொதுமக்களின் குறைகள் நீக்க நடவடிக்கை!
-
“நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு”
Leave a Reply