Saturday, September 13

மொபைல்  உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது:ஜியோமி

தொழில்நுட்ப நிறுவனமான ஜியோமி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொபைல் போன் உதிரிபாகங்களில் குறைந்தது 55 சதவிகிதத்தை உள்நாட்டிலிருந்தே தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜியோமி, தனது மின்சார சொகுசு காரை காட்சிப்படுத்தியுள்ளது.

ஜியோமியின் இந்திய தலைவர் பி. முரளிகிருஷ்ணன், செமி கண்டக்டர் அல்லாத உபரிபாகங்களில் (BOM) சுமார் 35 சதவிகிதம் இந்தியாவிலிருந்து பெறப்படுகிறது எனவும், அடுத்த இரு ஆண்டுகளில் இதனை 55 சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்திவரும் ஜியோமி, தனது ‘எஸ்யு7 மேக்ஸ்’ காரினை செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல், 5 வகையான மின்சார தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது.

673 பிஎஸ் ஆற்றல் கொண்ட இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 800 கிமீ தொலைவு செல்ல முடியும். 2.78 நொடிகளில் 100 கிமீ வேகம் எட்டும் இந்த கார், 33.3 மீட்டரில் 100 கிமீ வேகத்தில் இருந்து நிற்கும். 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த கார் இந்தியாவில் காட்சிப்படுத்த மட்டுமே வைக்கப்பட்டுள்ளது, விற்பனைக்கு இல்லை என்று ஜியோமி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  Airtel-flight ரோமிங் பேக்குகளை ரூ.195 முதல் அறிமுகப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *