Thursday, June 26

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பயனர்களுக்கென்று புதிய வீடியோ எடிட்டிங் செயலி…

மெட்டா நிறுவனம் ‘எடிட்ஸ்’ என்ற புதிய வீடியோ எடிட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிக்டாக் மற்றும் கேப்கட் போன்ற செயலிகளுக்கு மாற்றாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உருவாக்குவோருக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் மற்றும் கேப்கட் மீது அமெரிக்கா தடையை விதித்ததையடுத்து, கடந்த ஜனவரி மாதமே மெட்டா நிறுவனம் ‘எடிட்ஸ்’ செயலியை வெளியிடவுள்ளதாக அறிவித்தது. இன்று, அந்த அறிவிப்புக்கு அமைய ஆண்ட்ராயிட் மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்கு தளங்களில் ‘எடிட்ஸ்’ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த செயலி மூலம், பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் கேமராவை பயன்படுத்தி வீடியோக்களை எடுத்து, வாட்டர்மார்க் இல்லாமல் பதிவிட முடியும். ஏ.ஐ அனிமேஷன், வீடியோ மேம்பாட்டு வசதிகள், மற்றும் மியூஸிக் மூலம் எடிட் செய்யும் திறன் உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்த, இன்ஸ்டாகிராம் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. மெட்டாவின் இந்த புதிய முயற்சி, வீடியோ உருவாக்கும் வசதிகளை ஒரே இடத்தில் வழங்குவதாகும். மேலும், எதிர்வரும் அப்டேட்டுகளில் கூடுதல் அம்சங்கள் இடம்பெறும் என மெட்டா தெரிவிக்கிறது.

இதையும் படிக்க  கொங்குநாடு கல்லூரியில் "சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்" குறித்த சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *