சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே, வானியங்குடி ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வானியங்குடி ஊராட்சியில் சுமார் 12 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அந்த ஊராட்சி சிவகங்கை நகராட்சியின் விரிவாக்க பகுதியாக அமைந்துள்ள நிலையில், தமிழக அரசு அதனை நகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை வெளியிட்டுள்ளது. இது ஊராட்சியில் வசிப்பவர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுத்தும் என கிராம மக்கள் எதிர்க்கின்றனர்.
நகராட்சியுடன் இணைக்கப்பட்டால், வீட்டுவரி, நிலவரி, குடிநீர் வரி போன்ற அனைத்து வரிகளும் உயர்வதாகவும், கிராம மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை நிலைத்திருப்பதில் உதவும் 100 நாள் வேலை திட்டம் தற்போது செயல்படுவதில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து, கிராம மக்கள் ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆயிரக்கணக்கான மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.