Friday, January 24

“சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சுகாதாரமற்ற 1½ டன் ஆட்டு இறைச்சி…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பார்சல் பெட்டியில் அசுத்தமான முறையில் ஆட்டு இறைச்சி கொண்டு வரப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அந்த ரெயிலில் இருந்த இறைச்சியை பரிசோதனை செய்தனர்.

அப்போது, 3 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சி முறையாக பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது. அந்த இறைச்சியை சென்னை ஓட்டல்களில் விநியோகிக்க இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து 1½ டன் ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இறைச்சியின் நிலைமை குறித்து மேலும் பரிசோதனை செய்த பிறகே அதன் தன்மை குறித்து அதிகாரிகள் உறுதியாக முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிக்க  வனப்பகுதியில் யானை சடலம்: வனத்துறையினர் விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *