ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

சென்னையில் டி.பி.சத்திரம் பகுதியில், ரெளடி ரோஹித் ராஜனை காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் கைது செய்துள்ளனர்.

தேனியில் கைது செய்யப்பட்ட ரோஹித் ராஜன், சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு, ரோஹித் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர்.

அப்பொழுது ரோஹித் ராஜன் இரு காவலர்களை அரிவாளால் தாக்கி தப்பியோட முயற்சி செய்தார். இதற்கு எதிர்வினையாக, தற்காப்புக்காக காவல்துறையினர் ரோஹித்தை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காயமடைந்த ரோஹித் ராஜன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ரோஹித் தாக்கிய இரு காவலர்களும் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ரெளடி ரோஹித் ராஜனுக்கு மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கு உள்பட மொத்தம் 13 குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  குற்றால அருவிகளில் குளிக்க தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டம்...

Tue Aug 13 , 2024
கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 13) 2 மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, ஜிப்மர் மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அவசரமாக அமல்படுத்த வேண்டும், பெண் மருத்துவர் படுகொலையைப் பற்றிய விசாரணை திறந்தவெளியில் நடத்தப்பட வேண்டும், […]
image editor output image1487598294 1723527800550 - ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டம்...

You May Like