124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக அதிக மழை பதிவு!

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததுடன், வெப்ப அலையும் வீசியது. மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. வெயில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் ‘ரீமெல்’ புயல் காரணமாக மே மாதம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்தது.

தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 200 மி.மீ. வரை மழை பதிவாகியது. இது மிக அதிக மழைப்பொழிவாகும். கடந்த 124 ஆண்டுகளில் மே மாதத்தில் அதிக மழை பதிவான 7 ஆவது வருடமாக இந்த ஆண்டு உருவாகியுள்ளது. 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில் 205.2 மி.மீ. மழை பதிவாகியது. இதற்குப் பிறகு, 1930 இல் 163.7 மி.மீ., 1972 இல் 149.4 மி.மீ., 1955 இல் 148 மி.மீ., 1995 இல் 142.5 மி.மீ., 2014 இல் 139.3 மி.மீ. மற்றும் இந்த ஆண்டில் (2024) 138.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க  முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்த ஆண்டில், தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 19 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

JEE அட்வான்ஸ்டு 2024 தற்காலிக விடைத்தாள் வெளியீடு!

Sun Jun 2 , 2024
JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வுக்கான தற்காலிக விடைத்தாளை அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.ac.in இல் இன்று (ஜூன் 2) வெளியிட்டுள்ளது. மாணவர்கள் ஜூன் 3 வரை தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்றும் மேலும், ஒவ்வொரு ஆட்சேபனைக்கும் மாணவர்கள் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் ஜூன் 9 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. Post Views: 168 இதையும் படிக்க  சிதம்பரம் […]
1000232990 - JEE அட்வான்ஸ்டு 2024 தற்காலிக விடைத்தாள் வெளியீடு!

You May Like