கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அவிநாசி மேம்பாலம் அருகில் நேற்று பெய்த கனமழையால் நீர் தேங்கி இருந்ததை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், உதவி ஆணையர் திரு. செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு. கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி. ஹேமலதா, உதவி பொறியாளர் திரு. கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.