கோவை: நலவாழ்வு முயற்சிகள் மற்றும் கிராமப்புற சுகாதார திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சுகாதாரத்தைக் கூடுதல் வலுப்படுத்தியுள்ளதாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல் அலுவலர் (C.O.O) அமிதாப் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கோவையில் அவிநாசி சாலை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் புதிய “சூப்பர் ஸ்டார் காப்பீடு” திட்டம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் C.O.O அமிதாப் ஜெயினுடன், தமிழ்நாடு எக்ஸிகியூடிவ் பிரசிடெண்ட் மற்றும் ரீஜனல் ஹெட் பாலாஜி பாபு ஆகியோர் கலந்து கொண்டு முகவர்களும் வாடிக்கையாளர்களும் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில், அமிதாப் ஜெயின் கூறுகையில்:
- “சூப்பர் ஸ்டார் காப்பீடு மற்றும் ஸ்டார் ஆரோக்யா டிஜி சேவா ஆகியவை பொதுமக்களின் இருப்பிடம் அல்லது சூழ்நிலை கருத்தில்கொண்டு, அனைவருக்கும் உயர்தர சுகாதார சேவைகளை அணுகக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
- முதல் அரையாண்டில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இலவச டெலிமெடிசின் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1.6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் மட்டும் 42,000 வாடிக்கையாளர்களுக்கு ₹238 கோடி காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 26 முதல் 45 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்கள் அதிகமாக காப்பீடு பெறுவதாகவும் தெரிவித்தார்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் இளம் தொழில் வல்லுனர்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் பாலிசி,
- காப்பீடு தொகை
- கடுமையான நோய்
- விபத்து மரணம் போன்ற நிலைமைகளில் பிரீமியம் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சிகள், பொதுமக்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்களின் சுகாதாரத்திற்கான உறுதியான ஆதாரமாக செயல்படும் என்று அவர் கூறினார்.