பணி ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை – ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது…

காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலண்டர் தெருவைச் சேர்ந்த கஸ்தூரி (62), 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் தனியாக வசித்து வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார். கடந்த 22-ஆம் தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கஸ்தூரியின் வீட்டினுள் சென்று பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, கஸ்தூரி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில், கஸ்தூரியின் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான உறவுகள் மற்றும் வியாபார ஒப்பந்தங்களில் அவருக்கு உதவிய காஞ்சிபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதி (65) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் வளையாபதியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், வளையாபதி, தனது நண்பர் பிரபு (52) உடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனடியாக வளையாபதி கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிக்க  குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மக்கள் நலவாழ்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

Wed Aug 28 , 2024
கோவை: இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகிலுள்ள காவலர் சமுதாயக் கூடத்தில், மத்திய அரசின் ‘மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்’ குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்று துவங்கியது. இந்த கண்காட்சி ஆகஸ்ட் 31 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. கண்காட்சியில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி, ஆதார் திருத்தம், […]
IMG 20240828 WA0000 - மக்கள் நலவாழ்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

You May Like