கீழ்புத்துப்பட்டியில் கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றம்…

IMG 20240923 WA0022 - கீழ்புத்துப்பட்டியில் கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றம்...

புதுச்சேரி அருகிலுள்ள கீழ்புத்துப்பட்டியில் கடற்கரை ஆக்கிரமிப்பு சுவர் அகற்றம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் கடற்கரைக்கு அருகிலுள்ள அரசின் 1.65 ஏக்கர் நிலத்தை சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த என்.கே. சுரானா, தீபா சுரானா, தினேஷ் சுரானா ஆகியோர் ஆக்கிரமித்திருந்ததாக சமூக ஆர்வலர் குமார், விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார்.

அவர்கள் பல கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை தங்களின் பெயரில் போலியாக பத்திரப் பதிவு செய்து, ஆக்கிரமிப்பு இடத்தில் ஒரு உயரமான சுற்றுச்சுவர் கட்டியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் நில அளவை செய்து, ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதை கலெக்டரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் பழனி, சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார்.

தாமதம் ஏற்பட்டதால், குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலெக்டர் உத்தரவின் பேரில் மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், ஜேசிபி மூலம் சுற்றுச்சுவரை இடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க  பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *