ஆனைமலை அடுத்த திவான்சா புதூர் ஊராட்சியில், தமிழக கேரள எல்லையில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் அதே இடத்தின் அருகில் தனியார் மதுபானக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக நாடார் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பொள்ளாச்சி – மீனாட்சிபுரம் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ஆனைமலை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மீனாட்சிபுரம் அருகே உள்ள தனியார் மதுபான கடையை மூடாவிட்டால் தொடர்ந்து பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
Leave a Reply