
பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னே கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும் வேலுமணி என்பவர் கடந்த 21.10.2024 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்குச் சென்றுள்ளார். பணிகளை முடித்து இரவு 9.00 மணிக்கு வந்து பார்க்கும்போது வீட்டு முன் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5.5 பவுண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து வேலுமணி கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோமங்கலம் போலிசார் தனிப்படை அமைத்து விசாரனை மேற்கொண்டதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உடுமலையை சேர்ந்த சரவணன் என்பது தெரிய வந்தது அவரிடம் இருந்து திருடிய நகை மற்றும் பணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்த போலிசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர் சரவணன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.