புதுக்கோட்டை அருகே அனாதையாக கிடந்த பேக்கை காவல்துறை சோதனை செய்தபோது அதில் 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ குணம் கொண்ட நட்சத்திர ஆமைகள் இருப்பது கண்டுபிடிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன் நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்த நிலையில் அதோட நீட்சியா என்று வனத்துறை மற்றும் காவல்துறை விசாரணை
புதுக்கோட்டையில் சாந்தனாதபுரம் பகுதியில் பேக் ஒன்று அனாதையாக இருப்பதாகவும் அது அசைந்து வருவதாகவும் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் மருது உள்ளிட்ட காவலர்கள் அங்கு சென்று சோதனை செய்தபோது பேக்கில் மருத்துவ குணம் கொண்ட நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் அளித்துவிட்டு அந்த பேக்கை நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வனத்துரையுடன் இணைந்து சோதனை செய்ததில் அதில் 97 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது இதன் மதிப்பு சர்வதேச அளவில் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை காவல்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் இதனை தொடர்ந்து வனத்துறையினர் அதனை எடுத்துச் சென்று நாகை அல்லது கொல்லிமலையில் உள்ள பகுதியில் விடப் போவதாக தெரிவித்தனர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வெளிநாட்டிற்கு நட்சத்திர ஆமைகள் கடத்தப்பட இருந்ததா அதோட நீட்சியா என்பது குறித்து வனத்துறையுடன் இணைந்து காவல்துறையும் விசாரணை செய்து வருகிறது.