இந்தியாவின் முன்னணி மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ், இன்று கோவை, தமிழ்நாட்டில் தனது புதிய காட்சியகத்தை திறந்து வைத்தது. பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இந்திய சந்தைக்கு பொருத்தமான வகையில் வழங்கி வரும் க்ரீவ்ஸ், இந்த புதிய காட்சியகத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடன் தன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.
க்ரீவ்ஸ், எலக்ட்ரிக், சிஎன்ஜி, மற்றும் டீசல் என மூன்று வகையான எரிபொருள் விருப்பங்களுடன் வாகனங்களை வழங்குகிறது, இதன்மூலம் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு பல வாகனத் தேர்வுகளை வழங்குகிறது. இந்த புதிய காட்சியகம், கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் எளிதாக அணுக முடியும்.
காட்சியக திறப்பு விழாவில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளைன்சஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. ராஜா ரவிச்சந்திரன் மற்றும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
க்ரீவ்ஸ் தனது சந்தை பங்கை விரிவுபடுத்த MLR ஆட்டோ நிறுவனத்தில் 26% பங்குகளை பெற்றுக் கொண்டுள்ளது. அதேபோல், கோவை அடிப்படையாகக் கொண்ட அம்பியர் மோட்டார்ஸுடன் இணைந்து இரு சக்கர மின்சார வாகனங்களை விற்பனை செய்கிறது.
இந்த புதிய காட்சியகம், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. க்ரீவ்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்ட, நம்பகமான போக்குவரத்து தீர்வுகளை தொடர்ந்து வழங்கி வரவுள்ளது.
க்ரீவ்ஸ் சார்பில் விற்பனைக்குப் பிந்தைய தரத் துறையின் தலைவர் திரு. புன்னைவனம், தெற்கு மற்றும் மேற்கு மண்டல மேலாளர் திரு. பானு பிரசாத், சேவைத் துறைத் தலைவர் திரு. சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், க்ரீவ்ஸ் கோவை டீலர் நிறுவன MD பிரசன்ன வெங்கடேசன் மற்றும் பங்குதாரர்கள் சுரேஷ் குமார் மற்றும் ஃபஸாவுல்லா ஆகியோரும் விழாவில் சிறப்புரையாற்றினர்.
Leave a Reply