யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி -எஸ் பி வேலுமணி…

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டு இருந்த யானை தீடீரென தேவராஜை தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். இன்று உயிரிழந்த தேவராஜின் குடும்பத்தினரை நேரில் சப்தித்து ஆருதல் தெரிவித்ததுடன் நிதி உதவியையும் வழங்கினார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

img 20240921 wa00278862929761269007265 - யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி -எஸ் பி வேலுமணி...

அதேபோல் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் 24 வயது இளைஞர் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இனைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென யானை கார்த்திக்கை தாக்க துவங்கியது. இதில் படுகாய மடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி சம்பவ பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில், மகனை இழந்து வாழும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு ஆருதல் தெரிவித்து நிதி உதவியையும் வழங்கினார்.

இதையும் படிக்க  அம்மா உணவகங்களுக்கு 21 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது..

Sat Sep 21 , 2024
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்களான திருச்சிராப்பள்ளி போர்ட், டைமண்ட் சிட்டி, திருச்சி சிட்டி, ஹனி பி, திருச்சி நெக்ஸ்ட்ஜென்ட், திருச்சி ஐ டொனேஷன் மற்றும் திருச்சி தென்றல் ஆகிய சங்கங்கள் சார்பில் “எங்களுக்காக வாழும் உங்களுக்காக” என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கம் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி […]
IMG 20240921 WA0029 - திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது..

You May Like