வனப்பகுதியில் யானை சடலம்: வனத்துறையினர் விசாரணை

IMG 20240229 111721 - வனப்பகுதியில் யானை சடலம்: வனத்துறையினர் விசாரணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 புலிக்குட்டிகள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. காட்டில் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால், வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில், சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் வனச்சரக வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. வனத்துறையினர் பார்வையிட்டபோது, 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பாறைகளுக்கு இடையே விழுந்து இறந்தது தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். யானை ஹெல்மின்திக் நோயால் இறந்தது தெரியவந்தது. பின்னர் இறந்த யானையை மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டனர்.

இதையும் படிக்க  இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts