Wednesday, November 19

சிறுவனை கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு பதிவு


சென்னை அருகே 12 வயது சிறுவனை ராட் வெய்லர் நாய் கடித்த நிலையில், உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொளத்தூா் ஆசிரியா் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெரால்டு (12) என்ற சிறுவன், சனிக்கிழமை தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அப்பகுதியில் இருந்த ‘ராட் வெய்லா்’ நாய் திடீரென சிறுவனை கடித்தது
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் அந்த நாயை விரட்டினா். நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த ஜெரால்டை பொதுமக்கள் மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கொளத்தூா் போலீசார் விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க  திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *