“நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு”

IMG 20240919 WA0026 - "நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு"

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இராமமூர்த்தி, சங்கத்தின் முக்கிய செயல் திட்டங்களை விளக்கி பேசினார்.

இதில், அனைத்து மாவட்டங்களின் மாநில நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினர். குறிப்பாக, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், உடனடியாக உயர்த்த வேண்டியது, அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம் மற்றும் குடும்ப நல நிதி போன்ற உரிமைகளை கோரி, வரும் நவம்பர் 12ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

img 20240919 wa00276712212460988751138 - "நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு"

அத்துடன், டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பொருளாளர் ராமநாதன், மாநில செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் உள்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் மீன் கழிவுநீர் கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *