
முதலியார்பேட்டை தொகுதியில், போலீஸ் வீதியில் விளையாடிக்கொண்டிருந்த தியானேஸ்வரன் மற்றும் கௌரவ் ஆகிய சிறுவர்கள், வழியில் கிடந்த ரூ.70 பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கு பாராட்டுச் தெரிவிக்கும் விதமாக, போலீசார் அவர்களுக்கு சால்வை அணிவித்து, ரூ.100 வெகுமதி வழங்கினர். சிறுவர்கள் அந்த பணத்தை ஏற்க மறுத்ததால், அதற்குப் பதிலாக அவர்களுக்கு சாக்லேட் வழங்கப்பட்டது.