கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை சத்யா நகரில், சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஜி ஆர் டி கலைக்கல்லூரி இணைந்து சிட்டுக்குருவிகளுக்கான கூடு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கான சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள் குறித்த பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறைவதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பாண்டியராஜன், குறைந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு செயற்கை கூடுகள் அமைப்பதன் மூலம் வாழ்விடம் வழங்கி, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேலும், மாணவர்களுக்கு, கூடுகளை எந்த இடங்களில் பொருத்த வேண்டும், அவற்றை எப்படி பொருத்துவது என தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு, செய்முறையில் பயிற்சியும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மருத்துவர் தாமரைச்செல்வன் மற்றும் இயற்கை விவசாயி முத்து முருகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சி நிறைவில் ஆனந்த்குமார் நன்றி தெரிவித்தார்.
Leave a Reply