திருவானைக்காவலில் 5 நாள் முகாம்;திருச்சி வந்தார் விஜயேந்திரர்


ஐந்துநாள் பயணமாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று காலை திருவானைக்காவல் வந்தார். வடக்குஉள்வீதி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள சுவாமிகள் உலக நன்மைக்காக தினமும் பல்வேறு சிறப் பூஜைகள் நடத்தவுள்ளார்.

நேற்று காலை திருவானைக்காவல் சங்கரமடத்திற்கு வந்த விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு உள்ளூர் பக்தர்கள் மற்றும் சீடர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

காலை 10 மணியளவில் சுவாமிகள் தனது நித்யாராதன மூர்த்தியான சந்திரமவுளீஸ்வரருக்கு பூஜையும்மாலையில் பிரதோஷகால சிறப்பு பூஜை நடத்தினார். தொடர்ந்து நடந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். இன்று 20ம் தேதி காலை சந்திரமவுளீஸ்வரர் பூஜையும், மாலையில் பவுர்ணமி பூஜையும் நடத்துகிறார். நாளை 21ம் தேதி சன்னியாசிகள் ஆண்டுக்கு ஒரு முறை முக்கியத்துவத்துடன் நடத்தும் வியாசபூஜை நடத்துகிறார், 22ம் தேதி காலை, மாலை நேரங்களில் சந்திரமவுளீஸ்வர பூஜைகள் நடத்துகிறார். 23ம் தேதி செவ்வாய்கிழமை மாலை சங்கரமடத்தில் நடைபெறும் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுக்குப்பின், பள்ளி, மாணவ, மாணவியருக்கும், பக்தர்களுக்கும் நலத்திட்ட உதவிகளுடன் அருளாசி வழங்குகிறார். பின்னர் காஞ்சிபுரம் புறப்பட்டுச் செல்கிறார். இத்தகவல்களை திருவானைக்காவல் ஜகத்குரு வித்யாஸ்தானம் மேலாளர் ஆடிட்டர் ஜெயராமன் தெரிவிள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

BSNL-க்கு மாறிய 2.50 லட்சம் பேர் !

Fri Jul 19 , 2024
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து 2.50 லட்சம் பேர் தங்களது எண்களை BSNL-க்கு மாற்றியுள்ளனர். மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணமே ₹199-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதே சேவையை BSNL ₹108-க்கு வழங்கி வருகிறது. தற்போது 4G சேவையை வழங்கி வரும் BSNL விரைவில் 5G சேவையை அறிமுகம் செய்கிறது. இதையும் […]
69503 jio bsnl pti | BSNL-க்கு மாறிய 2.50 லட்சம் பேர் !