கோவை:மாற்றுத்திறனாளிகளுக்கான “சுவர்கா” என்ற தன்னார்வ அமைப்பின் 10ஆவது ஆண்டு விழா கோவையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2025ஆம் ஆண்டுக்கான “சிறப்பு மிக்கவன்” காலண்டரை வெளியிட்டார்.
நிகழ்வில் பேசிய நீதிபதி விஸ்வநாதன், “மாற்றுத்திறனாளிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடம் பெற முடியாது என்று யாரும் மறுக்க முடியாது. 2016ஆம் ஆண்டில் கொண்டு வந்த சட்டம், இத்தகைய உரிமைகளை உறுதிசெய்கிறது. மாற்றுத்திறனாளிகள் நம் கருணையை எதிர்பார்க்கவில்லை, அவர்களின் உரிமைகளைச் சட்டம் வழியே வழங்கியதை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்,” என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பன பதி, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.