
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் துலாவூர் KTR7s கபடி குழு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் சிறுவர் கபடி போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் 40 கிலோ எடை உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டன.
முதல் பரிசு ரூ.1501, இரண்டாம் பரிசு ரூ.1001, மூன்றாம் பரிசு ரூ.701, நான்காம் பரிசு ரூ.501 பரிசுகளுக்கும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. காலை 9 மணிக்கு ஆரம்பித்த விளையாட்டுப் போட்டிகள் இரவு 8 மணி வரை நடந்து முடிந்தது.
இதில் முதல் பரிசு கழனிவாசல், இரண்டாம் பரிசு கருப்பூர் ,மூன்றாம் பரிசு முத்துவடுகனாதபுரம் நான்காம் பரிசு கருநாவல்குடி அணி பரிசுகளை வென்றனர்.
மேலும் சிறந்த அணிகளுக்கு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன..