ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மறுவுருவாக்க ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை மருத்துவ சிகிச்சை வளாகத்தின் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம். R அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மறுவுருவாக்க ஆராய்ச்சி மையத்தையும் கால்நடை மருத்துவ சிகிச்சை வளாகத்தையும் திறந்து வைத்தார்.
இதனுடன், மாண்புமிகு வேளாண் அமைச்சர் திரு க. ஜெயக்குமார் அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கி, கல்வெட்டுப் பலகையை திறந்து வைத்தார். மேலும், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு AK சாய் J. சரவணன் குமார் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் தலைமைச்செயலர் டாக்டர் சரத் சௌகான், இ.ஆ.ப., அரசுச் செயலர் (கால்நடைப் பராமரிப்பு) திரு M. ராஜூ, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் டாக்டர் ஜி. லதா மங்கேஷ்கர், நிறுவனத்தின் புல முதல்வர் டாக்டர் வி. செழியன், பேராசிரியர்கள் மற்றும் பல மாணவ மாணவியர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
Leave a Reply