புதுச்சேரி அரசு சுவநிதி பிரெய்ஸ் பரிசளிப்பு விழா

IMG 20240831 WA0015 - புதுச்சேரி அரசு சுவநிதி பிரெய்ஸ் பரிசளிப்பு விழா

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறையின் சார்பில் சாலையோர வியாபாரிகள் திருவிழா மற்றும் சுவநிதி ‘பிரெய்ஸ்‘ பரிசளிப்பு விழா இன்று (30.08.2024) கடற்கரை சாலை, காந்தி திடலில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார். மேலும், சுயநிதி வழங்கலில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளை பாராட்டி, 2023-24 ஆண்டுக்கான ‘பிரெய்ஸ்’ விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, பயனாளிகளுக்கு பிரதமர் சுயநிதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காசோலைகளையும் அவர் வழங்கினார். அதற்கு முன்னதாக, துணைநிலை ஆளுநர் விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர வியாபாரிகளின் கடைகளைக் காண்வித்தார்.

விழாவில், மாண்புமிகு முதல்வர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சுயநதி சுய உதவிக் குழுக்களுக்கான புதிய லோகோவை வெளியிட்டார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் திரு R. செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு க. லட்சுமிநாராயணன், தலைமைச் செயலர் திரு சரத் சௌகான், உள்ளாட்சித் துறை செயலர் திரு நெடுஞ்செழியன், இயக்குனர் திரு சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பள்ளி மாணவர் பட்டா கத்தியுடன் பள்ளி வகுப்பறையில் ரீல்ஸ் செய்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *