புதுச்சேரி வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, புதுவையில் நீல நிறக்கொடி சான்று பெற்ற அழகிய கடற்கரை ஆகும். இந்தக் கடற்கரையில் வரும் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறவுள்ளது. இந்த 3 நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை வரை காற்றாடி திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழாவுக்கான முன்பதிவு பட்டத்திருவிழா இணையதளத்தில் ஆன்லைனில் மேற்கொள்ளலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
குறைந்தபட்சம் 6 அடி முதல் 19 அடி உயரம் வரை உள்ள 120 ராட்சத காற்றாடிகள் பறக்கவிடப்படும். புதுவையில் சர்வதேச அளவில் முதன்முறையாக பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள காற்றாடி திருவிழா இது.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை, 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.100 செலுத்தி பங்கேற்கலாம்.
Leave a Reply