புதுச்சேரியில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

image editor output image 126964580 1724837997673 - புதுச்சேரியில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

புதுச்சேரியில் மனைவி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு.

புதுச்சேரி முத்திரையர்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு (55). பால் வியாபாரி. இவரது மனைவி ரதிகலா (45) தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் பாபு மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 26.5.2021 அன்று கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதில் பாபு மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த மூன்று வருடங்களாக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்படடது. அதில் பாபுவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சந்திரசேகர் தீர்ப்பளித்தார்.

இதையும் படிக்க  புதுச்சேரி அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது… 9 பேருக்கு வலைவீச்சு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts