Thursday, May 15

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து புதுச்சேரியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுமதிக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சதுக்கம் முன்பு புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் சரவணன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

இதையும் படிக்க  புதுச்சேரி: மூடப்பட்ட பஞ்சாலைகள் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆலோசனை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *