புதுச்சேரியில் சர்வதேச காற்றாடி திருவிழா

புதுச்சேரி வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, புதுவையில் நீல நிறக்கொடி சான்று பெற்ற அழகிய கடற்கரை ஆகும். இந்தக் கடற்கரையில் வரும் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறவுள்ளது. இந்த 3 நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை வரை காற்றாடி திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவுக்கான முன்பதிவு பட்டத்திருவிழா இணையதளத்தில் ஆன்லைனில் மேற்கொள்ளலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

குறைந்தபட்சம் 6 அடி முதல் 19 அடி உயரம் வரை உள்ள 120 ராட்சத காற்றாடிகள் பறக்கவிடப்படும். புதுவையில் சர்வதேச அளவில் முதன்முறையாக பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள காற்றாடி திருவிழா இது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை, 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.100 செலுத்தி பங்கேற்கலாம்.

இதையும் படிக்க  புதுச்சேரி அரசு அலுவலகங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Mon Aug 19 , 2024
தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு உரிமையாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அந்த விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை வழங்கும் நிறுவனங்கள், சமீபத்தில் மின்கட்டண உயர்வின் காரணமாக, ஐஸ் கட்டிகளின் விலை உயர்த்தியதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, விசைப்படகு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Post Views: 216 இதையும் படிக்க  பாண்டிச்சேரி - […]
image editor output image 200730890 1724050177814 - தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

You May Like