
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஜனவரி மாதம் முழுவதும் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, 12-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதற்கான சட்டம் அமலுக்கு வந்தது. இந்த விழிப்புணர்வு குறித்த கருத்துக்களை வாகன ஓட்டிகளிடம் பரப்ப உதவுவதற்காக, போக்குவரத்து போலீசார் இந்த வாக்கத்தானை ஏற்படுத்தினர்.
காந்தி சிலையில் இருந்து துவங்கிய இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துறையின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவின் குமார் திருப்பாதி கொடியசைத்து தொடங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும், 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, 5 கிலோ மீட்டர் தூரம் பதாகைகளை ஏந்தி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.