Sunday, April 27

பாகூர் உள்விளையாட்டு அரங்கம்: போராட்டம்

புதுவை மாநிலம் பாகூர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம்  மூன்று வருடங்களாகப் பூரணமாக கட்டி முடிக்கப்பட்டு, இன்று வரை அதன் திறப்பு விழா நடத்தப்படாமல் மூடப்பட்டு உள்ளது. இது, புதுவை அரசு விளையாட்டு வீரர்களைப் பற்றிய அலட்சியப் பக்கம் வெளிப்படையாக காட்டுகிறது.

இந்த உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்படாமல் மூடப்பட்டிருப்பதால், அந்த அரங்கில் உள்ள உடைகள், உபகரணங்கள் பராமரிப்பின்றி பரிதவிக்கின்றன. இதனால் பாகூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யவோ அல்லது போட்டிகள் நடத்தவோ முடியாமல் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பலமுறை இந்த அரசுக்கு இந்தப் பாகூர் உள்விளையாட்டு அரங்கத்தை திறக்க எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, பாகூர் உள்விளையாட்டு அரங்கத்தை உடனடியாக திறந்து, விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து விளையாட்டு வீரர் நலச்சங்கம் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாகூர் சிவன் கோயில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 
இதையும் படிக்க  தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *