Wednesday, February 5

24 மனை தெலுங்கு செட்டியார்கள்: மிகப்பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கோரிக்கை

கோவை தொண்டாமுத்தூரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம் சார்பில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடராஜன், தமிழ்நாட்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட 24 மனை தெலுங்கு செட்டியார்கள் வாழ்ந்தாலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்கள் பின்தங்கிய நிலை தொடர்ந்துவருவதாக தெரிவித்தார்.

24 மனை தெலுங்கு செட்டியார்கள்: மிகப்பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கோரிக்கை

24 மனை தெலுங்கு செட்டியார்கள்: மிகப்பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கோரிக்கை

அரசாங்கத்தின் கட்டமைப்பில் முக்கியமான வேலைவாய்ப்புகள் கிடைக்காததுடன், பொருளாதார ரீதியிலும் அவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாக கூறினார். இதனால், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை சங்கம் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

24 மனை தெலுங்கு செட்டியார்கள்: மிகப்பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கோரிக்கை

24 மனை தெலுங்கு செட்டியார்கள்: மிகப்பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கோரிக்கை

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கலெக்டரிடம் மனு அளித்தல், ஊர்வலங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அரசியலில் உரிய அங்கீகாரம் இல்லாத நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என அறிவித்தார். விரைவில் நடைபெறவுள்ள மாநாட்டில் சங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிக்க  அதிமுக வார்ட் செயலாளர் வெட்டி கொலை
24 மனை தெலுங்கு செட்டியார்கள்: மிகப்பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கோரிக்கை

24 மனை தெலுங்கு செட்டியார்கள்: மிகப்பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *