Saturday, June 28

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு எங்கே?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே, 3 லட்சம் மக்களை அமர வைக்கக்கூடிய இடம் மாநாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை செப்டம்பர் 22 அல்லது 26 ஆம் தேதிகளில் நடத்துவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜய், கட்சி நிர்வாகிகளை நியமித்து, கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

இந்த மாநாட்டின் அட்டவணை மற்றும் கொடி அறிமுகம் போன்ற விவரங்களை பொது செயலாளர் ஆனந்த் உடன் ஆலோசித்து வருகிறார். மாநாடு நடைபெறவுள்ள இடத்தினை தேர்வு செய்யும் பணியில் திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதன் பின்னர், விக்கிரவாண்டி அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில், திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *