தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்….
இந்தியாவிற்கு
கிடைத்த அதிர்ஷ்டம் மோடி நமக்கு கிடைத்தது. ஜனநாயகத்தை காக்க வேண்டியது நமது பொறுப்பு. 3 வது முறை யாக மோடி ஆட்சி அமைக்க உள்ளார். சரியான எம்.பி. களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நமக்கான தேவைகளை பெற முடியும். தற்போது மோடி மீது மக்களுக்கு மரியாதை அதிகரித்துள்ளது. இந்திய ஜனநாயக கட்சி, பாஜக ஒரே கொள்கையுடைய கட்சிகள். உலகநாடுகள் மோடியை பாஸ் என்று அழைக்கிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் எல்லாம் ஊழல் வாதிகள். 1,200 மாணவர்களை பட்டதாரிகளாக மாற்றியதில் அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றியதில் மகிழ்ச்சி.
அண்ணாமலையின் பேச்சை அரை மணி நேரம் கேட்டால் நூலகத்தில் 10 புத்தகங்கள் படித்ததற்கு சமம். நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் லோகிதாசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனா, ஐ.ஜே.கே பொது செயலாளர் ஜெயசீலன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், அகில இந்திய துணை தலைவர் நெல்லை ஜீவா, கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, பாஜக குளித்தலை நகர தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply