வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பாஜகவின் மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 கட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. 7-ம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.கடைசி கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் உள்பட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் வாரணாசியில் முகாமிட்டு பிரதமருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து,இன்று(மே 27) மோடிக்கு ஆதரவாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் வாரணாசியில் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்களால் வாரணாசி மக்களவைத் தொகுதி கலைகட்டியுள்ளது.
மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் மூத்த தலைவர்கள்
Follow Us
Recent Posts
-
“நீட் சீருடை விவகாரம்: தாலி நிழல்-வெளிச்சம், வேல்முருகனின் எச்சரிக்கை”
-
அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.
-
கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது!
-
நேர்மையாக ரூ.70 ஒப்படைத்த சிறுவர்களுக்கு சாக்லேட் பரிசு
-
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு…
Leave a Reply