சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை குறிவைத்து, ஜாதி ரீதியான அவதூறுகள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த போஸ்டர்களை ஒட்டி, ஜாதி கலவரத்தை தூண்ட முயற்சித்ததாக கூறப்படும் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, அதிமுகவினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த போஸ்டர்களில், முக்குலத்தோரில் ஒரு ஜாதியினரை ஒதுக்கி செயல்படுவதாகவும், செந்தில்நாதனை மாற்ற வேண்டும் என கோரிய வாசகங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இது, அதிமுகவின் உள்ளக கலகத்தை வெளிப்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.