கோவை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு, அ.ம.மு.க சார்பில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மரியாதை செலுத்தினர்.
கோவை அண்ணா சிலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருச் சிலைக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், மத்திய மாவட்டச் செயலாளர் பாஸ்கர், மேற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில், வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மாநில தொழிற்சங்க பொருளாளர் கருணாகரன், தொண்டாமுத்தூர் தொகுதி பொறுப்பாளர் எம்.ஆர்.எஸ் சாகுல் ஹமீது, பொதுக்குழு உறுப்பினர் போட்டோ ஆறுமுகம், மற்றும் பல்வேறு பகுதி கழகச் செயலாளர்கள், பாசறை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொண்டாமுத்தூர் பகுதி செயலாளர் சின்னப்பா கிட்டு, பகுதி கழகச் செயலாளர்கள் சாகுல் அமீது, ரமேஷ், கருப்புசாமி, ராமநாதன் நாகராஜன், மோகன், ஜெட்லி பிரகாஷ், யூசுப் மற்றும் பலர் இதனை சிறப்பித்தனர்.
அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்ஜி.ஆரின் பெருமைமிகு சாதனைகளை நினைவு கூர்ந்து, அவரது திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வு அமமுக சார்பில் எளிமையான முறையில் நடைபெற்று, பொதுமக்களிடையே அவரின் நினைவு கூரப்பட்டது.